×

கம்பத்தில் எஸ்டிபிஐ கட்சி ஆலோசனை கூட்டம்

கம்பம், பிப். 20: கம்பத்தில் எஸ்டிபிஐ கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கம்பம் சட்டமன்ற தொகுதி தலைவர் தாவூத் நிசார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் காதர் சாகிப், மற்றும் சேக் பரீத் முன்னிலை வகித்தனர். ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி தலைவர் அஜ்மீர் கான் வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட தலைவர் அபூபக்கர் சித்தீக் துவக்க உரை நிகழ்த்தினார். சிறப்பு அழைப்பார்களாக எஸ்டிபிஐ கட்சி மாநில பொதுச் செயலாளர் அஹமது நவவி மற்றும் மாநில துணைத் தலைவர் ரபீக் அஹமது ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

மாநில பொதுக்குழு உறுப்பினர் கலீல் ரஹ்மான், சமூக ஊடக அணி மாநில இணை ஒருங்கிணைப்பாளர் சதாம் உசேன், வேளாண் அணி மாவட்ட தலைவர் காதர் மைதீன் யூசுப், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ஹூசைன் மீரான், போடி தொகுதி தலைவர் லத்தீப், மற்றும் விமன் இந்திய மூமென்ட் நிர்வாகிகள், உறுப்பினர்கள், மற்றும் எஸ்டிபிஐ கட்சியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக கம்பம் நகர தலைவர் சிராஜ் தீன் நன்றியுரை கூறினார்.

The post கம்பத்தில் எஸ்டிபிஐ கட்சி ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : STBI ,Kamba ,Kampham ,STPI party ,Gampah ,Kambam Assembly Constituency ,President ,Dawood Nisar ,District Secretaries ,Kadar Saqib ,Sheikh Pared ,Dinakaran ,
× RELATED மோடி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கமிஷனரிடம் புகார்