×

முன் இருக்கையில் அமர்ந்தவர் சீட் பெல்ட் அணியவில்லை கேரள முதல்வரின் காருக்கு ரூ.500 அபராதம்

திருவனந்தபுரம்: கேரளாவில் போக்குவரத்து விதிகளை மீறிய கேரள முதல்வர் பினராயி விஜயனின் காரும் இந்தக் கேமராவில் சிக்கியது தெரியவந்துள்ளது. கடந்த டிசம்பர் 12ம் தேதி மாலை 4 மணியளவில் கோட்டயம் அருகே உள்ள முண்டக்கயம்- குட்டிக்கானம் ரோட்டில் பினராயி விஜயனின் கார் சென்றது. ஆனால் அப்போது அந்தக் காரில் பினராய் விஜயன் பயணம் செய்ய வில்லை. அவரது பாதுகாவலரும், அதிகாரிகளும் மட்டுமே அதில் இருந்தனர். காரின் முன் சென்ற பஸ்சில் பினராயி விஜயன் இருந்தார். காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த நபர் சீட் பெல்ட் அணியவில்லை. இது அங்கு இருந்த செயற்கை நுண்ணறிவு கேமராவில் பதிவானது. இதைத் தொடர்ந்து பினராயி விஜயனின் காருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. இதற்கான நோட்டீஸ் திருவனந்தபுரத்திலுள்ள அவரது அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த டிசம்பர் மாதமே நோட்டீஸ் அனுப்பப்பட்ட போதிலும் இதுவரை அபராதத் தொகையை கட்டவில்லை என்று கூறப்படுகிறது.

The post முன் இருக்கையில் அமர்ந்தவர் சீட் பெல்ட் அணியவில்லை கேரள முதல்வரின் காருக்கு ரூ.500 அபராதம் appeared first on Dinakaran.

Tags : Kerala ,Chief Minister ,Thiruvananthapuram ,Pinarayi Vijayan ,Mundakkayam-Kuttikanam road ,Kottayam ,Dinakaran ,
× RELATED கடந்த 10 வருடங்களில் எத்தனை...