×

திரௌபதி அம்மன் தர்மராஜா கோயிலில் கும்பாபிஷேக விழா

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த கன்னிமாப்பேட்டை, சதுரங்ரங்கப்பேட்டை கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் தர்மராஜா கோயிலில் திருப்பணிகள் நிறைவுபெற்றது. இதனைத் தொடர்ந்து கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்நிலையில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இந்த விழாவை முன்னிட்டு கடந்த 17ம் தேதி பகவத் பிரார்த்தனை, மேதினி பூஜை, அங்குரார்பனம், வாஸ்து சாந்தி, அக்னி பிரதிஷ்டை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது.

மேலும் நேற்றுமுன்தினம் 18ம் தேதி காலை புண்யாஹவாசனம், கும்ப ஆராதனம், யாகசாலை பூஜை, ஹோமும், மாலை கோ பூஜை, திருமஞ்சனம், ஹோமமும் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று காலை 7.30 மணிக்கு விஸ்வரூபம் புண்யாஹவாசனம் நிகழ்ச்சியும், கும்ப ஆராதனமும், கும்பம் புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விமானம் மூலவர் கும்பாபிஷேகமும் நடைபெற்றது.

இந்த கும்பாபிஷேக விழாவில் கன்னிமாபேட்டை, சதுரங்கப்பேட்டை, பூண்டி, நெய்வேலி, புல்லரம்பாக்கம், ஒதப்பை உள்பட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் த.மோகன் மற்றும் விழா குழுவினர், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

The post திரௌபதி அம்மன் தர்மராஜா கோயிலில் கும்பாபிஷேக விழா appeared first on Dinakaran.

Tags : Kumbhabhishek ,Draupadi Amman Dharmaraja temple ,Thiruvallur ,Tiruvallur ,Chaturangrangappettai ,Jeernotharana Ashtabandana Kumbabhishek ceremony ,Draupadi ,Amman ,Dharmaraja Temple ,Kumbabhishek ceremony ,
× RELATED தாசம்பாளையத்தில் நூற்றாண்டு பழமை...