×

நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை : சப்-கலெக்டர் பங்கேற்பு

பொன்னேரி: பொன்னேரி தாலூகா அலுவலகத்தில் சப் – கலெக்டர் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பொன்னேரியில் உள்ள தாலுகா அலுவலக கூட்டரங்கில் நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தல் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுக்கு ஆலோசனைக் கூட்டம் நேற்று பொன்னேரி சப்-கலெக்டர் வாகே சங்கேத் பல்வந்த் தலைமையில் நடந்தது.

பொன்னேரி தாசில்தார் மதிவாணன் முன்னிலையில் இந்த அறிமுக கூட்டத்தில் தேர்தலின் போது, வாக்குச்சாவடி பணிகளை எவ்வாறு மேற்கொள்வது, அசம்பாவிதங்கள் ஏற்படக்கூடிய பகுதிகளை கண்டறிந்து பாதுகாப்பு அளிப்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளுடன் கலந்தாய்வு நடைபெற்றது. இதில் பொன்னேரி தேர்தல் துணை வட்டாட்சியர் கனகவல்லி மற்றும் வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, காவல் துறை, வேளாண்மை துறை உள்ளிட்ட துறையை சேர்ந்த அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.

The post நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை : சப்-கலெக்டர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Ponneri ,Ponneri taluka ,Dinakaran ,
× RELATED 10 ஆண்டுகளாக நஷ்டஈடு வழங்காத...