×

காஞ்சிபுரத்தில் 15 சவரன் நகை திருட்டு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட விளக்கடி கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவர், தனது வீட்டின் கீழ் தளத்தில் பட்டு சேலை விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் விற்பனையை முடித்துவிட்டு குடும்பத்தினருடன் வீட்டில் ஒரே அறையில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். மறுநாள் காலை எழுந்து வந்து ராஜேஷ் பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோ சாவி கொண்டு திறக்கப்பட்டு உள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

மேலும், பீரோவை திறந்து பார்த்தபோது, அதிலிருந்து சுமார் 15 சவரன் தங்க நகை மற்றும் ரொக்கம் ரூ.50 ஆயிரம் திருடு போனது தெரியவந்துள்ளது. எனவே, இது‌ குறித்து ராஜேஷ் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்நிலையில், போக்குவரத்து அதிகம் உள்ள பிரதான பகுதியில் கொள்ளையர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post காஞ்சிபுரத்தில் 15 சவரன் நகை திருட்டு appeared first on Dinakaran.

Tags : Sawaran ,Kancheepuram ,Kanchipuram ,Rajesh ,Chandadi Kovil Street ,Kanchipuram Corporation ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு, காஞ்சிபுரம்...