×

வித்யாசாகர் கல்லூரி ஆண்டு விழாவில் சிறந்த மாணவிகளுக்கு விருது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு வித்யாசாகர் மகளிர் கல்லூரியில் 19ம் ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவில் செங்கல்பட்டு அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் கிள்ளிவளவன் மற்றும் தனியார் தொலைக்காட்சி நடிகர் திவாகர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு ஆண்டு விழாவை தொடங்கி வைத்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு பரிசு வழங்கி பேசினர்‌. பின்னர், கல்லூரியின் ஆண்டு மலரான வித்யாவர்த்தினி சிறப்பு விருந்தினர்களால் வெளியிடப்பட்டது.

பின்னர், 2020-2022ம் கல்வியாண்டில் நடைபெற்ற தேர்வில் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த முதுகலை வணிகவியல் துறையைச் சேர்ந்த மாணவி சந்தான பாரதிக்கு விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது. மேலும், 14 பேருக்கு சிறந்த மாணவியர்களுக்கான விருது வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து பல்வேறு வகையான கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில், வித்யாசாகர் கல்வி குழுமத்தின் தாளாளர் விகாஸ் சுரானா, துணைத் தலைவர் மற்றும் பொருளாளர் சுரேஷ் கன்காரியா, எம்பவர்மெண்ட் முதல்வர் மாரிச்சாமி, வித்யாசாகர் பெண்கள் கல்லூரி முதல்வர் அருணாதேவி உள்ளிட்ட கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள், பெற்றோர் கலந்துக்கொண்டனர்.

The post வித்யாசாகர் கல்லூரி ஆண்டு விழாவில் சிறந்த மாணவிகளுக்கு விருது appeared first on Dinakaran.

Tags : Vidyasagar College ,Annual Ceremony ,Chengalpattu ,Vidyasagar Women's College ,Chengalpattu Government Arts ,Science College ,Principal ,Killivalavan ,Divagar ,Festival ,Dinakaran ,
× RELATED அழகப்பா பல்கலையில் புதிய பட்டய படிப்பு அறிமுகம்: துணைவேந்தர் ஜி.ரவி தகவல்