×

மொபட்டிலிருந்து விழுந்து தந்தை, மகள் காயம்

பூந்தமல்லி: மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம், ராஜீவ் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் மகள் சரஸ்வதி (24), மதுரவாயலில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் 2ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல கல்லூரிக்கு செல்வதற்காக, தனது தந்தையுடன் மொபட் பின்னால் அமர்ந்து இருந்தார். ஆலப்பாக்கம் அருகே சென்றபோது, பின்னால் பைக்கில் வந்த மர்ம நபர்கள் சரஸ்வதி கையில் இருந்த செல்போனை பறித்தனர்.

இதில், நிலைத்தடுமாறி தந்தையும், மகளும் கீழே விழுந்தனர். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் காயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இது குறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post மொபட்டிலிருந்து விழுந்து தந்தை, மகள் காயம் appeared first on Dinakaran.

Tags : Poontamalli ,Nagaraj ,Saraswathi ,Rajiv Gandhi Nagar ,Maduravayal, Alapakkam ,Maduravayal ,Dinakaran ,
× RELATED பூந்தமல்லியில்...