×

தமிழக அரசு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் நிலையில் ஆளுநர் ரவி 4 நாள் டெல்லி பயணம்

மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் இருந்து இன்று காலை விமானம் மூலமாக ஆளுநர் ஆர்.என்.ரவி 4 நாள் பயணமாக புதுடெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். இன்று தமிழக அரசு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் நிலையில், கவர்னரின் புதுடெல்லி பயணம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை விமானநிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் இருந்து இன்று காலை 6 மணியளவில் ஏர்இந்தியா பயணிகள் விமானத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி 4 நாள் பயணமாக புதுடெல்லிக்கு புறப்பட்டு சென்றார். அவருடன் செயலாளர், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் உதவியாளர் உடன் சென்றுள்ளனர். பின்னர் புதுடெல்லியில் 4 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு, வரும் 22ம் தேதி இரவு 7 மணியளவில் ஆளுநர் ஆர்.என்.ரவி விமானம் மூலமாக சென்னை திரும்புகிறார்.

முன்னதாக, தமிழ்நாடு சட்டமன்றத்தில் இந்தாண்டுக்கான முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை முழுமையாகப் படிக்காததால் பிரச்னை ஏற்பட்டது. பின்னர் 3 நாள் பயணமாக கோவை சென்றிருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, நேற்று மாலைதான் சென்னை திரும்பினார். இந்நிலையில், இன்று திடீரென புதுடெல்லிக்கு 4 நாள் பயணமாக ஆளுநர் ஆர்.என்.ரவி புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு அவர் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசுவார் என்று கூறப்படுகிறது.

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் இன்று நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் 4 நாள் புதுடெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post தமிழக அரசு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் நிலையில் ஆளுநர் ரவி 4 நாள் டெல்லி பயணம் appeared first on Dinakaran.

Tags : Governor Ravi ,Delhi ,Tamil Nadu government ,Meenambakkam ,Governor RN ,Ravi ,New Delhi ,Chennai Airport ,Governor ,Chennai ,
× RELATED பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு...