×

இன்று முதல் பிப்.23ம் தேதி வரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்: வானிலை மையம்

சென்னை: இன்று(19.02.2024) முதல் பிப்.23ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

“இன்று(19.02.2024) முதல் பிப்.23ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

பிப்.24-25ம் தேதிகளில் கடலோர தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. உள்தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்” என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post இன்று முதல் பிப்.23ம் தேதி வரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்: வானிலை மையம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Puduwa ,Karaikal ,Chennai ,Puduwai ,Meteorological Centre ,Weather Center ,Dinakaran ,
× RELATED வாகன ஸ்டிக்கர் விவகாரம்: பார்...