×

சென்னையில் சர்வதேச மூத்தோர் உலகக் கோப்பை கிரிக்கெட்: தொடக்க விழாவில் 12 அணி கேப்டன்கள் கொடிகளுடன் பங்கேற்பு

சென்னை: சர்வதேச மூத்தோர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று தொடங்குகிறது. இதை ஒட்டி நடைபெற்ற சாம்பியன் கோப்பை அறிமுக நிகழ்ச்சியில் 12 அணிகளை சேர்ந்த கேப்டன்கள், கொடிகளுடன் பங்கேற்றனர். 60வயதுக்கு மேற்பட்டோருக்கான 2வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று தொடக்கி மார்ச் 2ம் தேதி வரை நடைபெற உள்ளது. இப்போட்டியில் இந்தியா,ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உட்பட 12 அணிகள் பங்கேற்கின்றனர்.

லீக் மற்றும் நாக்கௌட் சுற்று அடிப்படையில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போட்டிகள் நடைபெறுகின்றது. இப்போட்டிக்கான சாம்பியன் கோப்பை அறிமுக நிகழ்ச்சி சென்னை விஜிபி கடற்கரை வளாக தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இதில் 12 அணிகளை சேர்ந்த கேப்டன்களும் தங்கள் நாட்டு தேசிய கொடியுடன் பங்கேற்றனர். தொடர்ந்து நடைபெற்ற நடன நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவர்ந்தன.

The post சென்னையில் சர்வதேச மூத்தோர் உலகக் கோப்பை கிரிக்கெட்: தொடக்க விழாவில் 12 அணி கேப்டன்கள் கொடிகளுடன் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : International Senior Cricket World Cup in ,Chennai ,International Senior Cricket World Cup ,Champions Cup ,2nd Over 60 Cricket World Cup ,Dinakaran ,
× RELATED ஆன்லைனில் மெட்ரோ ரயில் டிக்கெட் பெறுவதில் சிக்கல்