×

மாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல 23ம் தேதி உகந்த நாள் வரும் 24ம்தேதி கவுதம நதியில் தீர்த்தவாரி திருவண்ணாமலையில்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல வரும் 23ம் தேதி உகந்த நேரம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதையொட்டி, தரிசனத்துக்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுகின்றனர். அதன்படி, மாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் வரும் 23ம் தேதி மாலை 4.22 மணிக்கு தொடங்கி, 24ம் தேதி மாலை 6.18 மணிக்கு நிறைவடைகிறது. எனவே, 23ம் தேதி இரவு கிரிவலம் செல்ல உகந்தது என அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்வதற்கு வசதியாக, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

The post மாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல 23ம் தேதி உகந்த நாள் வரும் 24ம்தேதி கவுதம நதியில் தீர்த்தவாரி திருவண்ணாமலையில் appeared first on Dinakaran.

Tags : Masi month ,Krivalam ,Tiruvannamalai ,Thiruvannamalai ,Gautama river ,Pournami Krivalam ,Darshan ,Masi ,Theerthavari ,
× RELATED பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு...