×

பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சென்னை – கடற்கரை வேலூர் ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு


சென்னை: வேலூர் கன்டோன்மென்ட்டுக்கு இயக்கப்படும் மெமு சிறப்பு ரயில் இன்று (ஏப்.23)திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட உள்ளது. சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் அதிகாலை முதலே திரளான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். நீண்ட வரிசையில் காத்திருந்து அண்ணாமலையாரை பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சித்ரா பவுர்ணமியையொட்டி பக்தர்களின் வசதிக்காக திருவண்ணாமலைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கபட்டுள்ளது. திருவண்ணாமலைக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 1,820 பஸ்கள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகிறது.

இந்நிலையில் வேலூர் கன்டோன்மென்ட்டுக்கு இயக்கப்படும் மெமு சிறப்பு ரயில் இன்று சென்னை கடற்கரையில் இருந்து திருவண்ணாமலை வரை நீட்டித்துள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து ஏப்.23-ம் தேதி மாலை 6 மணிக்கு மெமு சிறப்பு ரயில் (06033) புறப்பட்டு, வேலூர் கன்டோன்மென்ட்டை இரவு 9.45 மணிக்கு அடையும். அங்கிருந்து புறப்பட்டு நள்ளிரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடையும்.

திருவண்ணாமலையில் இருந்து ஏப்.24-ம் தேதி அதிகாலை 3.45 மணிக்கு மெமு சிறப்பு ரயில் (06034)புறப்பட்டு, வேலூர் கன்டோன்மென்ட்டை அதிகாலை 5.35 மணிக்குஅடையும். அங்கிருந்து புறப்பட்டு,சென்னை கடற்கரைக்கு காலை 9.50 மணிக்கு அடையும் என்று தெரிவித்துள்ளனர்.

The post பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சென்னை – கடற்கரை வேலூர் ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Vellore ,Tiruvannamalai ,Pournami Krivalam ,MEMU ,Vellore Cantonment ,Krivalam ,Chitra Pelarnami ,Annamalai ,- Beach Vellore ,
× RELATED சென்னை கடற்கரை – வேலூர் மின்சார ரயில்...