×

புதிய திட்டப்பணிக்கு பூமி பூஜை

நாமக்கல்: நாமக்கல் ஒன்றிய பகுதிகளில் புதிய திட்ட பணிகளுக்கு, நாமக்கல் எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார். நாமக்கல் ஒன்றியம், வீசாணம் ஊராட்சி ஜெஜெ நகர், நருவலூர் ஊராட்சி, காதப்பள்ளி ஊராட்சி சேவாகவுண்டம்பாளையம், மாரப்பநாயக்கன்பட்டி ஊராட்சி செங்கோடம்பாளையம் ஆகிய பகுதிகளில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ₹50லட்சம் மதிப்பீட்டில் நீர்தேக்க தொட்டி, மகளிர் ஓய்வறை, சாலை அமைக்கும் பணி ஆகியவற்றிற்கான பூமி பூஜை விழா நடந்தது. இதற்கு நாமக்கல் ஒன்றிய திமுக செயலாளரும், அட்மா குழு தலைவருமான பழனிவேலு தலைமை வகித்தார்.

The post புதிய திட்டப்பணிக்கு பூமி பூஜை appeared first on Dinakaran.

Tags : Bhumi Pooja ,Namakkal ,Namakkal MLA ,Namakkal Union ,Veesanam Panchayat Jeje Nagar ,Naruvalur ,Panchayat ,Kathapalli ,Sevakavundampalayam ,Marappanayakanpatti Panchayat Sengodampalayam ,Legislative Assembly Constituency ,Bhoomi Pooja ,
× RELATED கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி;...