×

தீவிரவாதிகளுக்கு உதவ எல்லையில் செல்போன் கோபுரங்கள் அமைக்கும் பாகிஸ்தான்

ஜம்மு: இந்தியா – பாகிஸ்தான் இடையேயான எல்லை பிரச்னை பல ஆண்டுகளாக நீடிக்கும் நிலையில், ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என அழைக்கப்படும் அந்த பகுதி பாகிஸ்தானின் நேரடி நிர்வாகத்தின்கீழ் இருக்கிறது. இந்நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் தொழில்நுட்ப உதவியுடன் பாகிஸ்தான் ஊடுருவி வருவதாக அதிர்ச்சி தகவல் வௌியாகி உள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது, “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஊடுருவும் தீவிரவாதிகளுக்கும், அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களுக்கும் உதவும் விதமாக தொலைதொடர்பு கோபுரங்களின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. ரகசிய தகவல்களை பரிமாற ஸ்மார்ட் போன், ரேடியாவை இணைக்க அதிக தொழில்நுட்ப திறன், பாதுகாப்பு தன்மை கொண்ட சீனாவின் ஒய் எஸ் எம் எஸ் தகவல் தொடர்பு சேவைகள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த தொழில்நுட்பத்தின் மூலம் ஜம்முவில் ஊடுருவும் தீவிரவாத குழு, அதனுடன் தொடர்புடைய குழுக்களுடன் தீவிரவாதிகள் இணைக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த தொழில்நுட்பம் மூலம் வரும் தகவல்களை ராணுவத்தால் இடைமறிக்க முடியாது” என்று எச்சரித்துள்ளனர்.

 

The post தீவிரவாதிகளுக்கு உதவ எல்லையில் செல்போன் கோபுரங்கள் அமைக்கும் பாகிஸ்தான் appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Jammu ,India ,Kashmir ,Dinakaran ,
× RELATED பிளம்ஸ் பழத்தின் நன்மைகள்!