×

எடப்பாடியை வரவேற்க சென்ற 9ம் வகுப்பு மாணவன் கடலில் மூழ்கி பலி

கொள்ளிடம்: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அடுத்த சீர்காழி பாதரக்குடி கிராமத்தை சேர்ந்த பஜ்ருதீன் மகன் நிசாருதீன் (14). 9ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் நேற்று அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சீர்காழிக்கு வருகை தந்தார். அப்போது அவரை வரவேற்கும் விதமாக சிலம்பாட்ட பயிற்றுனர் தினேஷ்குமார் தலைமையிலான வீரர்கள் 30 பேர் சிலம்பம் சுற்றி அவரை வரவேற்றனர். பின்னர் சிலம்பாட்ட குழுவினர், நேற்று மாலை கொள்ளிடம் அருகே கூழையாறு சென்று கடலில் குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக நிசாருதீன் கடலில் மூழ்கி உயிரிழந்தான். பின்னர் அவரது உடல் சற்று தூரத்தில் கரை ஒதுங்கியது. இது குறித்து தகவலறிந்த திருமுல்லைவாசல் கடலோர காவல்படை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் நிசாருதீன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post எடப்பாடியை வரவேற்க சென்ற 9ம் வகுப்பு மாணவன் கடலில் மூழ்கி பலி appeared first on Dinakaran.

Tags : Edappadi ,Kollid ,Bajruddin ,Nisaruddin ,Sirkazhi Patharakudi ,Mayiladuthurai district ,AIADMK ,general secretary ,Edappadi Palanichami ,Sirkazhi ,
× RELATED கச்சா எண்ணெய் விலை குறைந்தும்...