×

உண்மை தெரிந்தும் பொய்தான் பேசுவார் நிர்மலா சீதாராமன்: அமைச்சர் கிண்டல்

புதுச்சேரியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தூங்குவது மாதிரி நடிப்பவர்களை எழுப்ப முடியாது. நாடாளுமன்றத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஏன்? காலதாமதம் என்றால், தமிழக அரசு நில ஆர்ஜிதம் செய்து தரவில்லை என ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார். 2019ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அப்போது, அடிக்கல் நாட்ட பிரதமரை அழைத்து வந்தவர் எடப்பாடி பழனிச்சாமி. நிலஆர்ஜிதம் செய்யப்படாத யாருக்கோ சொந்தமான இடத்தில் பிரதமர் எப்படி வந்து அடிக்கல் நாட்டுவார். நிதி பெற்று தருவதில் காலதாமதம் ஏற்பட்டது என்று உண்மையாக காரணத்தை கூறி இருக்கலாம். உண்மையான காரணத்தை கூறாமல், நில ஆர்ஜிதம் செய்யப்படவில்லை என கூறியிருந்தார். இதற்கான ஆதாரங்களை நான் சமர்ப்பித்துள்ளேன்.

2019ல் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு என்று முடிவு எடுக்கப்பட்ட 224 ஏக்கர் நிலப்பரப்புக்கு உரிய ஆவணங்கள் 2020ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இத்தகவல் எல்லாம் தெரிந்த பிறகு கடந்தாண்டு நாடாளுமன்றத்தில் உயர்ந்த பொறுப்பில் உள்ள நிதி அமைச்சர் நிலஆர்ஜிதம் செய்து தராததால் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இப்படி தெரிந்தே பொய் சொல்பவர். இவ்வாறு அவர் கூறினார்.

 

The post உண்மை தெரிந்தும் பொய்தான் பேசுவார் நிர்மலா சீதாராமன்: அமைச்சர் கிண்டல் appeared first on Dinakaran.

Tags : Nirmala Sitharaman ,Puducherry ,Health Minister ,M. Subramanian ,Madurai AIIMS Hospital ,Union Finance Minister ,Nirmala ,Tamil Nadu government ,
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...