- குஜராத் நீதிமன்ற நடவடிக்கை
- ஜாம்நகர்
- குஜராத்
- அசோக் லால்
- ஜம்நகர், குஜராத் மாநிலம்
- ஸ்ரீஜி
- நீதிமன்ற நடவடிக்கை
- தின மலர்
ஜாம்நகர்: ரூ.1 கோடி செக்மோசடி வழக்கில் சிக்கிய பிரபல இயக்குனருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து குஜராத் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. குஜராத் மாநிலம் ஜாம்நகரை சேர்ந்தவரும், ஸ்ரீஜி ஷிப்பிங் உரிமையாளருமான அசோக் லால் என்பவர், பிரபல இயக்குனர் ராஜ்குமார் சந்தோசுக்கு ஒரு கோடி ரூபாய் கடன் கொடுத்திருந்தார். இந்த கடன் தொகையானது, கடந்த 2015ம் ஆண்டு திரைப்படம் எடுப்பதற்காக வாங்கப்பட்டது. கடனை திருப்பித் தர அவர்களுக்குள் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட தொகையை திருப்பிக் கொடுத்த ராஜ்குமார் சந்தோஷ், பின்னர் மீதமுள்ள தொகையை குறிப்பிட்டு 10 காசோலைகளை அசோக் லாலிடம் ராஜ் குமார் கொடுத்துள்ளார். ஆனால் அந்த காசோலையின் வங்கிக் கணக்கில் பணம் இல்லை. என திரும்பி வந்தது அதிர்ச்சியடைந்த அசோக் லால், ராஜ்குமார் சந்தோஷியை பலமுறை தொடர்பு கொண்டும் அவர் பதில் அளிக்கவில்லை.
அதனால் அவர் ஜாம்நகர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ராஜ்குமார் சந்தோசுக்கு சம்மன் அனுப்பிய நீதிமன்றம், ஒவ்வொரு செக் பவுன்ஸுக்கும் ரூ.15,000 அபராதம் விதித்தது. மேலும் நீதிமன்றம் அனுப்பிய சம்மனுக்கும் ராஜ்குமார் ஆஜராகவில்லை. இதற்கிடையே வழக்கு விசாரணை முடிவுக்கு வந்த நிலையில், குற்றச்சாட்டப்பட்ட ராஜ்குமார் சந்தோஷிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம், கடனாக வாங்கிய ரூ.1 கோடிக்கு பதிலாக ரூ.2 கோடி வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.
The post ரூ.1 கோடி செக்மோசடி வழக்கில் சிக்கிய பிரபல இயக்குனருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை: குஜராத் நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.