×

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

 

ஈரோடு,பிப்.18: ஈரோட்டில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் இருந்து மணிக்கூண்டு செல்லும் சாலையானது இருபுறங்களிலும் அதிக அளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் சாலையின் அகலம் குறைந்து வாகனங்கள் செல்வதற்கும், பாதசாரிகள் நடந்து செல்லவும் பெரும் இடையூறாக இருந்து வந்தது. இதே போல ஆர்கேவி ரோடு,நேதாஜி வீதி உள்ளிட்ட பகுதிகளிலும் வணிக நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் நிலவி வந்தது.

இந்நிலையில், ஈரோடு மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இணைந்து கடந்த 2 நாட்களாக ஆக்கிரமிப்புகளை அகற்றி வந்தனர். இதில் சாலையோர வியாபாரிகள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,ஆக்கிரமிப்புகள் அகற்ற காலஅவகாசம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில்,நேற்று நேதாஜி சாலையில் மேற்கொள்ள இருந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், தொடர்ந்து 2 நாட்கள் மாநகர பகுதியில் ஆக்கிரமிப்புகள அகற்றப்பட்டன. பெரும்பாலான இடங்களில் அகற்றப்பட்டுவிட்டது. இன்னும் ஒரு சில இடங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. போலீஸ் பற்றாக்குறை, ஊழியர்களுக்கு தொடர் பணி உள்ளிட்ட காரணங்களால் தற்காலிகமாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. திங்கட்கிழமைக்கு மேல் மீண்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெறும் என்றனர்.

 

The post ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Erode ,Erode Panneerselvam Park ,Manikoondu ,Dinakaran ,
× RELATED கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த...