×

தீப்பிடித்து வீடு சேதம் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு திமுக சார்பில் நிதி உதவி

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த காட்டூரில் பார்த்திபன் ருக்குமணி ஆகியோரின் இரண்டு குடிசை வீடுகள் மின்சார கசிவால் தீப்பிடித்து எரிந்து சேதம் அடைந்தன. அக்குடும்பத்தினருக்கு திமுக சார்பில் மீஞ்சூர் ஒன்றிய குழு தலைவர் ரவி, மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜெகதீசன் ஆகியோர் நிதி உதவி மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கினர். அவர்களுடன் காட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வ ராமன், துணைத் தலைவர் ரேவதி சண்முகம், முன்னாள் தலைவர் முனுசாமி, அனுப்பம்பட்டு தேவராஜ், ரமேஷ், மோகன், காட்டூர் ராஜேஷ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடனே இருந்தனர்.

The post தீப்பிடித்து வீடு சேதம் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு திமுக சார்பில் நிதி உதவி appeared first on Dinakaran.

Tags : DMK ,Ponneri ,Parthiban Rukumani ,Meenjur ,Kattur ,Tiruvallur ,Meenjur Union Committee ,President ,Ravi ,Meenjur South Union DMK ,
× RELATED பொன்னேரி அருகே மனைவியின் தகாத உறவுக்கு உதவிய மாமியார் கொலை; மருமகன் கைது