×

ஆலப்பாக்கம் கிராமத்தில் புதர் மண்டிய சுகாதார வளாகம்: சீரமைக்க கோரிக்கை

ஊத்துக்கோட்டை: ஆலப்பாக்கம் கிராமத்தில் பயன்பாடின்றி புதர் மண்டிக் காணப்படும் சுகாதார வளாகத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரியபாளையம் அருகே எல்லாபுரம் ஒன்றியம், ஆலப்பாக்கம் கிராமம் உள்ளது. இங்கு விவசாயிகள், வியாபாரிகள் என 2000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்காக, கடந்த 2012-2013ம் ஆண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சுகாதார வளாகம் கட்டப்பட்டது.

இந்த, சுகாதார வளாகத்தில் தண்ணீர் இல்லாததால் பயன்பாடில்லாமல் மூடியே கிடக்கிறது. இதனால், சுகாதார வளாகத்தின் உள்ளேயும், வெளிப்புறத்திலும் புதர்கள் மண்டி காணப்படுகிறது. இதுகுறித்து, பெரியபாளையம் பிடிஒ அலுவலகத்தில் மனு கொடுத்தும், எந்த பலனும் இல்லை. எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘ஆலப்பாக்கம் கிராமத்தில் பெண்கள். குழந்தைகளுக்கு என சுகாதார வளாகம் ரூ.6 லட்சம் செலவில் கட்டப்பட்டது.

ஆனால். ஒரு வருடம் மட்டுமே சுகாதார வளாகம் செயல்பட்டது. அதன்பிறகு அதில் தண்ணீர் வசதி இல்லாததால் செயல்படாமல் மூடியே கிடக்கிறது. கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் போடப்பட்டது. மேலும், பெரியபாளையம் பிடிஒ அலுவலகத்தில் மனு கொடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள், பயன்பாடின்றி புதர் மண்டிக் காணப்படும் சுகாதாரம் வளாகத்தினை சீரமைத்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்’’ என்றனர்.

The post ஆலப்பாக்கம் கிராமத்தில் புதர் மண்டிய சுகாதார வளாகம்: சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Budhar ,Mandiya Health Complex ,Alappakkam Village ,Uthukkottai ,Alappakkam ,Periyapalayam ,Ellapuram Union ,Puthar Mandiya health complex ,
× RELATED ஊத்துக்கோட்டை அருகே பரபரப்பு பதுக்கி...