×

நேர்முக தேர்வு முடிந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான ரிசல்ட் வெளியீடு: கலந்தாய்வு வரும் 21ம் தேதி நடக்கிறது

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பதவியில் (நேர்முக தேர்வு பதவி) 116 காலி பணியிடத்துக்கும், குரூப்-2ஏ பதவியில் (நேர்முகத் தேர்வு அல்லாத பதவி) 5,990 இடங்கள் என 6,151 காலி பணியிங்களுக்கான தேர்வை நடத்தியது. இப்பதவிகளுக்கான மெயின் தேர்வு ரிசல்ட் கடந்த மாதம் 11ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் குரூப் 2 பதவியில் அடங்கிய பதவிகளில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் அத்தேர்வுக்கான வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் நேர்முக தேர்வுக்கு தற்காலிகமாக 327 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான நேர்முக தேர்வு சென்னை பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்தில் கடந்த 12ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து நேற்று வரை நேர்முக தேர்வு நடந்தது.

இதில் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டவர்களில் 327 பேரின் நேர்முகத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு மதிப்பெண்கள் விவரங்களுடன் தேர்வு முடிவுகளை நேற்று இரவு டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. தேர்வர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் சென்று தங்களுடைய மதிப்பெண் விவரங்களை தெரிந்து கொள்ளலாம். தேர்வர்கள் இந்த தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் அடுத்தகட்டமாக கலந்தாய்வு மூலம் பணியிடங்களில் நிரப்பப்பட உள்ளது. மேலும் கலந்தாய்வு வரும் 21ம் தேதி நடக்கிறது. இதில் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் படித்த மாணவி மஞ்சுளா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். அவரை சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிர்வாக இயக்குனர் டாக்டர் வைஷ்ணவி சங்கர் வாழ்த்து தெரிவித்தார்.

The post நேர்முக தேர்வு முடிந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான ரிசல்ட் வெளியீடு: கலந்தாய்வு வரும் 21ம் தேதி நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : TNPSC ,CHENNAI ,TNPSC Group ,Dinakaran ,
× RELATED 90 பணியிடங்களை நிரப்ப நடப்பாண்டுக்கான...