×

அரசு துறைகளில் காலி பணியிடங்கள் 15 நாட்களில் 1,253 பேர் தேர்வு: டிஎன்பிஎஸ்சி தகவல்

சென்னை: அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களில் 15 நாட்களில் 1,253 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்து உள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) செயலாளர் கோபாலசுந்தரராஜ் வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் கடந்த 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை உரிமையியல் நீதிபதி பதவிக்கு 237 பேரும், உதவி நிலவியலாளர் பதவிக்கு 40 பேரும், ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய உதவி பொறியாளர்(கட்டடவியல்) உள்ளிட்ட பதவிகளுக்கு 752 பேர், உதவி புள்ளியியல் ஆய்வாளர் பதவிக்கு 190 பேர் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப மொத்தம் 1,253 பேர் தேர்வு செய்யயப்பட்டுள்ளனர்.

The post அரசு துறைகளில் காலி பணியிடங்கள் 15 நாட்களில் 1,253 பேர் தேர்வு: டிஎன்பிஎஸ்சி தகவல் appeared first on Dinakaran.

Tags : TNPSC ,CHENNAI ,Tamil Nadu Public Service Commission ,Gopalasundararaj ,
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு; 6955 பேர் எழுதினர்