×

சொந்த செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்: ஊராட்சி மன்ற தலைவருக்கு பாராட்டு

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் அடங்கிய நத்தம் – கரியச்சேரி ஊராட்சிக்குட்பட்ட நத்தம் கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட, சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும் என்று முடிவு செய்த ஊராட்சி மன்ற தலைவர் சேகர் தனது சொந்த செலவில் ரூ.5 லட்சம் மதிப்பில் 2000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே அமைத்து கொடுத்தார்.

அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் சேகர் விழாவிற்கு தலைமையேற்று, பொதுமக்கள் முன்னிலையில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். இதில் ஊராட்சி துணை தலைவர் சூரியபிரபா உமாசங்கர், ஊராட்சி செயலர் ராஜேந்திரன், விஏஓ மோகன்தாஸ், பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.

The post சொந்த செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்: ஊராட்சி மன்ற தலைவருக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Panchayat Council ,President ,Thirukkalukkunram ,Shekhar ,Nattam village ,Thirukkalukungunram ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் விச்சூரில் கொலை...