×

தகுதி சான்றில்லாத 3 வாகனங்கள் பறிமுதல்

நாமக்கல்: நாமக்கல் பகுதியில் தகுதி சான்று இல்லாமல் இயக்கப்பட்ட 3 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சக்திவேல், சரவணன் ஆகியோர் நேற்று நாமக்கல் கீரம்பூர் சுங்கசாவடி, மற்றும் மோகனூர் பகுதியில் திடீர் வாகன தணிக்கை மேற்கொண்டனர். மொத்தம் 160 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டது. இதில் பல்வேறு விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட 52 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை அளிக்கப்பட்டது. தகுதி சான்று இல்லாமல் இயக்கப்பட்ட 3 வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. சாலை வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட 4 வாகனங்களுக்கு ₹45 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பல்வேறு விதிமீறி இயக்கப்பட்ட வாகனங்களுக்கு இனக்க கட்டணமாக ₹2.70 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் தெரிவித்தார்.

The post தகுதி சான்றில்லாத 3 வாகனங்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Namakkal ,North Regional Transport Officer ,Murugan ,Sakthivel ,Saravanan ,Namakkal Keerampur Sungasavadi ,Mohanur ,Dinakaran ,
× RELATED கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி;...