×

கோயிலில் சாமி சிலைகள் திருட்டு

மோகனூர்: மோகனூர் அருகே நள்ளிரவு மாரியம்மன், விநாயகர் மற்றும் அப்புச்சிமார் கோயிலில் இருந்த சாமி சிலைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். மோகனூர் ஒன்றியம், மாடகாசம்பட்டியில் மாரியம்மன், விநாயகர் கோயில் உள்ளது. மேலும், அறநிலையத்துறைக்கு சொந்தமான அப்புச்சிமார் கோயிலும் உள்ளது. இங்கு இருபிரிவினரிடயே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று காலை மாரியம்மன், விநாயகர் கோயில் மற்றும் அப்புச்சிமார் கோயிலில் இருந்த சாமி சிலைகள் திருடு போயிருந்தது கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து மோகனூர் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

The post கோயிலில் சாமி சிலைகள் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Sami ,Mohanur ,Mariamman ,Vinayagar ,Appuchimar ,Mariamman and ,Madakasambatti, Moganur ,Appuchimar temple ,Dinakaran ,
× RELATED மோகனூர் -வாங்கல் சாலை சோதனைச்சாவடியில் எஸ்பி ஆய்வு