×

துணை சுகாதார நிலையம் கட்டும் பணிக்கு பூமி பூஜை

மோகனூர்: மோகனூர் ஒன்றியம் என்.புதுப்பட்டியில் உள்ள துணை சுகாதார நிலையத்தில், என்.புதுப்பட்டி, ஜங்கலாபுரம், மேலப்பட்டி, ராமஉடையானூர், குப்பம்பாளையம் ஆகிய 5 குக்கிராமங்களில் உள்ள 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் மருத்துவ வசதிகளை பெற்று வந்தனர். இந்நிலையில், துணை சுகாதார நிலையத்தின் கட்டிடம் சிதிலமடைந்தது. பொதுமக்களின் கோரிக்கையை எடுத்து, இதனை இடித்து அகற்றி விட்டு, புதிய துணை சுகாதார நிலையம் கட்டுவதற்கான பூமி பூமி விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் உமா தலைமை வகித்தார். எம்எல்ஏக்கள் பொன்னுசாமி, ராமலிங்கம் முன்னிலை வகித்தனர்.

The post துணை சுகாதார நிலையம் கட்டும் பணிக்கு பூமி பூஜை appeared first on Dinakaran.

Tags : Bhumi Pooja ,Mohanur ,N. Pudhupatti ,Jangalapuram ,Melapatti ,Ramaudayanur ,Kuppampalayam ,Moganur ,
× RELATED மோகனூர் அருகே மணல் கடத்தல் வழக்கில் லாரி உரிமையாளர் கைது