×

திமுக செயற்குழு கூட்டம்

 

சிவகங்கை, பிப். 17: திருப்புவனத்தில் மேற்கு, கிழக்கு ஒன்றிய, பேரூர் திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அவைத் தலைவர்கள் இளங்கோவன், சுப்பிரமணியன், ராசு தலைமை வகித்தனர். ஒன்றிய செயலாளர்கள் வசந்திசேங்கைமாறன், கடம்பசாமி, பேரூர் செயலாளர் நாகூர்கனி முன்னிலை வகித்தனர். தீர்மானங்களை விளக்கி மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன் பேசினார். பொற்கிழி மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் கலந்து கொள்ளும் கழக இளைஞரணி செயலாளர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பான வரவேற்பு அளிப்பது.

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி சார்பில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பெருந்திரளாக கலந்து கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பேரூராட்சி துணைத் தலைவர் ரகமத்துல்லாகான், ஒன்றிய நிர்வாகிகள் ராமலிங்கம், பிச்சைமணி, ஈஸ்வரன், வெங்கடேசன், ரவி, சக்திமுருகன், ராமு, மகேந்திரன், மீனாட்சிசுந்தரம், விவசாய அணி சேகர், விவசாய தொழிலாளர் அணி மணிகண்டன், சங்கர், ஒன்றிய இளைஞரனி அமைப்பாளர்கள் தேவதாஸ், அறிவுக்கரசு, கண்ணன், இலக்கிய அணி கோபால், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பாலகிருஷ்ணன், வேல்பாண்டி, மாரிதாசன், பத்மாவதிமுத்துக்குமார், சித்ராஆறுமுகம், ராமலட்சுமிபாலகிருஷ்ணன் மற்றும் கிளைக்க கழக, வட்டக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post திமுக செயற்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Sivagangai ,West ,East Union ,Perur ,Thirupuvanam ,Elangovan ,Subramanian ,Rasu ,Vasantishengaimaran ,Kadambasamy ,Nagurkani ,DMK Executive Committee ,Dinakaran ,
× RELATED சிவகங்கை மாவட்டம் மறவமங்கலத்தில் மஞ்சுவிரட்டு: ஐகோர்ட் கிளை அனுமதி