×

தேர்தல் பத்திரம் மூலம் ஜி.கே.வாசன் கட்சிக்கு 93 சதவீத நிதி: பின்னி எடுக்கும் அண்ணாமலை

தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: தேர்தல் பத்திரம் திட்டத்தை உச்ச நீதிமன்றம் தடை செய்ததை முழுமையாக ஏற்கிறோம். ஆனால் இதில் மாற்றங்கள் செய்து மீண்டும் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற பாஜ முயற்சி செய்யும். தேர்தல் பத்திரம் திட்டத்தின் மூலம் பாஜவுக்கு வரக்கூடிய பணம் 52 சதவீதம் தான். காங்கிரஸ் கட்சிக்கு 62 சதவீதம் வருகிறது.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு (பாஜவின் கூட்டணி கட்சி) 93 சதவீதம் வருகிறது என்று புள்ளி விவரங்களோடு அடுக்க ஆரம்பித்து விட்டார். திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) என்று சொல்வதற்கு பதிலாக தமிழ் மாநில காங்கிரஸ் என அண்ணாமலை மாற்றி கூறி விட்டார். இதை சமூக வலைத்தளங்களில் பலரும் டிரோல் செய்து வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்பு தான் சபாநாயகர் என்று சொல்வதற்கு பதிலாக ஆளுநர் என பத்துக்கும் மேற்பட்ட முறை கூறி அனைவரையும் பதைபதைக்க வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post தேர்தல் பத்திரம் மூலம் ஜி.கே.வாசன் கட்சிக்கு 93 சதவீத நிதி: பின்னி எடுக்கும் அண்ணாமலை appeared first on Dinakaran.

Tags : GK Vasan ,Annamalai ,Tamil Nadu ,BJP ,president ,Rayapetta ,YMCA ,Supreme Court ,GK Vasan party ,Dinakaran ,
× RELATED கூட்டாட்சி தத்துவத்திற்கு ஏற்ப...