×

சிறுமியை கர்ப்பமாக்கிய வழக்கில் தாய்மாமன் உட்பட இருவருக்கு ஆயுள் தண்டணை: போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

செங்கல்பட்டு:காஞ்சிபுரம் அடுத்த கம்மார்பாளையம், அருந்ததிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஹிரி (28), கங்காதரன் (21) ஆகிய இருவரும் அதே பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு படித்து வந்த 15 வயது சிறுமியை வலுகட்டாயமாக முள் புதரில் அழைத்து சென்று பலமுறை உடலுறவில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அந்த மாணவி கர்ப்பமாகி பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், பாதிக்கபட்ட சிறுமி 2021ம் ஆண்டு கொடுத்தபுகாரின் அடிப்படையில் ஹரி, கங்காதரன் ஆகிய இருவரையும் காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில், சிறுமியை கர்ப்பமாக்கிய வழக்கில் கைதான இருவரும் ஜாமினில் வெளிவந்தனர். இந்த வழக்கு செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதி தமிழரசி, நேற்று குற்றவாளியான ஹரி, கங்காதரன் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கினர். மேலும் குற்றவாளிகள் இருவரும் தலா ரூ.15 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் ஒரு மாதத்திற்குள் இழப்பீடு வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கி புழல் சிறையில் அடைத்தனர்.

The post சிறுமியை கர்ப்பமாக்கிய வழக்கில் தாய்மாமன் உட்பட இருவருக்கு ஆயுள் தண்டணை: போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : POCSO ,Chengalpattu ,Hiri ,Gangatharan ,Kammarpalayam ,Kanchipuram ,
× RELATED பள்ளி மாணவிகளை பாலியல் தள்ளிய வழக்கு:...