×

பெரியபாளையத்தில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

ஊத்துக்கோட்டை: பெரியபாளையத்தில், அரசு பள்ளி மாணவ – மாணவிகள் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர். பெரியபாளையத்தில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் துறை சார்பில் சாராயம், கள்ளசாராயம், போலி மதுபானங்கள் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. மதுவிலக்கு அமல் பிரிவு எஸ்ஐ சிவா தலைமை தாங்கினார். இதில், பள்ளியின் தலைமையாசிரியர் சம்பத் கலந்துகொண்டு, போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். இப்பேரணியில், பெரியபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 300க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் கலந்துகொண்டு, பெரியபாளையம் பஜார் வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக பேருந்து நிலையம் வரை சென்று, பொதுமக்களுக்கு போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
நிகழ்வின்போது, பெரியபாளையம் போலீசார், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post பெரியபாளையத்தில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : -drug awareness rally ,Periyapalayam ,Oothukottai ,Prohibition Enforcement Division Police Department ,rally on drug elimination ,
× RELATED திமுக பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம்: எம்பி, எம்எல்ஏ பங்கேற்பு