- பாஜக
- கே.எஸ்.அழகிரி பொலிர்
- தமிழ்நாடு காங்கிரஸ் குழு
- ஜனாதிபதி
- கே.எஸ்.அழகிரி
- யூனியன் அரசு
- சிதம்பரம், கடலூர் மாவட்டம்
- டெல்லி பொலிஸ்
- தில்லி
- கே.எஸ்.அழகிரி போலிர்
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு பேசுகையில், ‘டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை கலைப்பதற்காக டெல்லி போலீஸ் 3000 கண்ணீர் புகை குண்டுகளை கொண்டு வந்து வீசுகிறார்கள். மோடி அரசு இதற்கு பதில் சொல்ல வேண்டும். மோடி அபுதாபிக்கு சென்று நாராயண கோயிலை திறந்து வைக்கிறார். இங்கு விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தை மோடி கண்டுகொள்ளவில்லை. காங்கிரஸ் கட்சி வங்கி கணக்கை முடக்கி இருக்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சி என்ன இருக்கிறது. பணம் ஒன்றுமில்லை. தாமதமாக கணக்கு காட்டியதாக ரூ.200 கோடி அபராதம் போட்டால் எப்படி கட்டுவது. நாங்கள் வரி ஏய்ப்பு செய்யவில்லை. நீங்கள் (பாஜ) வன்முறையில் நம்பிக்கை உடையவர்கள். ஏனென்றால் மணிப்பூரில் அதை நீங்கள் செய்தீர்கள். வன்முறையை தொடுக்கிற அரசியல் இயக்கமாக பாஜ உள்ளது. தேர்தல் நன்கொடை என்கிற பெயர்களில் வங்கியில் மூலமாக பணத்தை பெறுவது தவறு. நாட்டை சீரமைக்கின்ற அரசியல் கட்சிகள் இதுபோன்ற செயல்கள் செய்வது தவறு. எங்களுடைய ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை பிரதமர் இவர் தான் என்று சொல்லி தேர்தலை சந்தித்தது கிடையாது. இவ்வாறு அவர் பேசினார்.
The post விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு: வன்முறை அரசியல் இயக்கம் பாஜதான், கே.எஸ்.அழகிரி பொளீர் appeared first on Dinakaran.