×

டெல்லி ஐஐடி விடுதியில் மாணவன் தற்கொலை

புதுடெல்லி: ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர் கல்வி நிலையங்களில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வருகிறது.டெல்லியில் உள்ள ஐஐடியில் எம்.டெக் படித்து வந்தவர் சஞ்சய் நெர்கர்(24). மகாராஷ்டிராவின் நாசிக்கை சேர்ந்தவர்.சஞ்சயின் பெற்றோர் நேற்று முன்தினம் அவரது செல்போனில் தொடர்பு கொண்டுள்ளனர்.

ஆனால், அவர் பதிலளிக்காததால் விடுதியில் தங்கி இருந்த அவரது நண்பரிடம் விடுதி அறைக்கு சென்று அவரை பார்க்குமாறு கூறியுள்ளனர். அவரது நண்பர் ஐஐடி வளாகத்தின் காவலர்களின் உதவியுடன் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்த போது சஞ்சய் மின்விசிறியில் துாக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். அவரது தற்கொலைக்கான கடிதம் ஏதும் கண்டெடுக்கப்படவில்லை. காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

The post டெல்லி ஐஐடி விடுதியில் மாணவன் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Delhi ,IIT ,New Delhi ,IITs ,IIMs ,Sanjay Nerkar ,IIT Delhi ,Nashik, Maharashtra ,Sanjay ,
× RELATED தேர்தலையொட்டி கெத்து காட்டும்...