×

மருத்துவ ஆய்வக தொழில்நுட்புநர் பட்டயப்படிப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் 2023-24ம் ஆண்டிற்கான மருத்துவ ஆய்வக தொழில்நுட்புநர் பட்டயப்படிப்பு பயிற்சியில் சேர ஒரு வாரத்திற்கு விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது என சென்னை மாநராட்சி அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் தண்டையார்பேட்டையில் உள்ள தொற்றுநோய் மருத்துவமனையில் 2023-24ம் கல்வி ஆண்டிற்கான மருத்துவ ஆய்வக தொழில்நுட்புநர் பட்டயப்படிப்பு பயிற்சி தொடங்கப்பட உள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் பணியாளர்களின் வாரிசுகளுக்கும் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி, பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவியருக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்.

மருத்துவ ஆய்வக தொழில்நுட்புநர் பட்டயப்படிப்பு (2023-24) பயிற்சிக்கு விண்ணப்பிக்க 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாடு அரசு விதிகளின்படி ஒற்றை சாளர முறையில் சமூகம் வாரியாக சுழற்சி முறையில் மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இயக்குநர் தொ.நோ.ம.மனை. எண்.187 திருவொற்றியூர் நெடுஞ்சாலை, தண்டையார்பேட்டை, சென்னை-600 081ல் உள்ள தொற்றுநோய் மருத்துவமனை அலுவலகத்தில் வரும் 19ம் தேதி முதல் 25ம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அனைத்து நாட்களிலும் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 28ம் ேததி மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

The post மருத்துவ ஆய்வக தொழில்நுட்புநர் பட்டயப்படிப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai Corporation ,CHENNAI ,Chennai Municipal Corporation ,Thandaiarpet Epidemic Hospital ,Epidemic Hospital ,Thandaiarpet ,Public Health Department ,Dinakaran ,
× RELATED சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 1165...