×

ஜார்க்கண்ட் அமைச்சரவை விரிவாக்கம் ஹேமந்த் சோரனின் தம்பி உட்பட 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு

ராஞ்சி: ஜார்க்கண்ட் அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில், முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரர் உட்பட 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். ஜார்க்கண்டில் ஜேஎம்எம் கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரனுக்கு எதிராக அமலாக்கத்துறை நில மோசடி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிது. இந்த விவகாரம் தொடர்பாக கடந்த மாதம் 31ம் தேதி ஹேமந்த் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் அவரை அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்தது. இதையடுத்து கடந்த 2ம் தேதி ஜேஎம்எம் மூத்த தலைவரான சம்பாய் சோரன் புதிய முதல்வராக பதவியேற்றார்.

அவருடன் காங்கிரஸ் தலைவர் ஆலம்கீர் ஆலம், ஆர்ஜேடி எம்எல்ஏ சத்யானந்த் போக்தா ஆகியோர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். இந்நிலையில் அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. ஹேமந்த் சோரனின் தம்பியான பசந்த் சோரன்,காங்கிரசை சேர்ந்த ராமேஷ்வர் ஓரான்,பன்னா குப்தா,பதல் பத்ரலேக் உட்பட 8 பேர் அமைச்சர்களாக பொறுப்பு ஏற்றனர். ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

The post ஜார்க்கண்ட் அமைச்சரவை விரிவாக்கம் ஹேமந்த் சோரனின் தம்பி உட்பட 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு appeared first on Dinakaran.

Tags : Jharkhand ,Hemant Soran ,Ranchi ,Chief Minister ,JMM ,Dinakaran ,
× RELATED ஹேமந்த் சோரன் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு