×

உரிமைகளை மீட்கும் ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் தெருக்கூத்து, துண்டு பிரசுரம் மூலம் பிரச்சாரம்

திருவள்ளூர்: திருவள்ளூர் நகர திமுக செயலாளரும், நகர மன்றத் துணைத் தலைவருமான சி.சு.ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் நகர திமுக சார்பில் உரிமைகளை மீட்கும் ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் தெருக்கூத்து, துண்டு பிரசுர விநியோகம் மூலம் பிரச்சாரம் செய்யும் நிகழ்ச்சி இன்று சனிக்கிழமை காலை 10 மணியளவில் பெரியகுப்பம், 10:30 மணியளவில் உழவர் சந்தை, 11 மணியளவில் தேரடி ஆகிய 3 இடங்களில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏ, தலைமை செயற்குழு உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ ஆகியோர் கலந்து கொண்டு பேசுகின்றனர். எனவே இந்த நிகழ்ச்சியில் நகர மன்றத் தலைவர், நகர நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், பிரதிநிதிகள், நகர்மன்ற உறுப்பினர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், தலைவர்கள், துணைத் தலைவர்கள், துணை அமைப்பாளர்கள், முன்னோடிகள் என அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post உரிமைகளை மீட்கும் ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் தெருக்கூத்து, துண்டு பிரசுரம் மூலம் பிரச்சாரம் appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Thiruvallur city DMK ,city council vice president ,C.S. Ravichandran ,Stalin ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் தொகுதிக்கான...