×

‘உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல்’ பொதுக்கூட்டத்தில் நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும்

 

திருப்பூர், பிப்.16: ‘உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல்’ என்ற தலைப்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும் என செல்வராஜ் எம்எல்ஏ அழைப்பு விடுத்துள்ளார். திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், எம்எல்ஏவுமான செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒன்றிய பாஜ அரசு, தமிழ்நாட்டிற்கு இழைத்த அநீதிகளையும், ஒன்றிய அரசிடம் மாநிலத்தின் உரிமைகளை அடகு வைத்து தற்போது நாடகமாடும் அடிமை அதிமுகவின் துரோகங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில்,

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு முதற்கட்டமாக, கழக முன்னணியினர் ‘உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல்’ என்னும் தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. அதன்படி திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு தொகுதிக்கு நாளை (17ம் தேதி ) சனிக்கிழமை பெருந்துறையில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் கழக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என் நேரு சிறப்புரையாற்றுகிறார்.  இதுபோல பல்லடம் தொகுதிக்கு கோவை கொடிசியாவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்புரையாற்றுகிறார்.

இதுபோல அவிநாசி தொகுதிக்கு நாளை மறுதினம் 18ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மேட்டுப்பாளையத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் திண்டுக்கல் லியோனி சிறப்புரையாற்றுகிறார். அதுசமயம் கழக மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளைக்கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், முன்னாள் – இந்நாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்து சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், தொழிற்ச்சங்க நிர்வாகிகள், மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post ‘உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல்’ பொதுக்கூட்டத்தில் நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Stalin ,Tirupur ,Selvaraj ,MLA ,Thirupur North District ,DMK ,Dinakaran ,
× RELATED பல்லடம் வாக்குச்சாவடியில் திமுக எம்எல்ஏ தர்ணா