×

பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோயிலில் ₹1.41 கோடி மதிப்பில் திருப்பணிகள்: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்

சென்னை, பிப்.16: பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோயிலில் ரூ.1.41 கோடி மதிப்பில் திருப்பணிகளை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். 2023-24ம் ஆண்டு சட்டமன்ற மானியக் கோரிக்கையில் “சென்னை, பெசன்ட்நகர் அஷ்டலட்சுமி கோயிலில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்” என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை செயல்படுத்திடும் வகையில் உபயதாரர்கள் நிதியின் மூலம் ரூ.4.60 லட்சம் மதிப்பீட்டில் ஆஞ்சநேயர் சன்னதி, தன்வந்திரி சன்னதி மற்றும் சக்கரத்தாழ்வார் சன்னதிகளும், ரூ.4.70 லட்சம் மதிப்பீட்டில் குருவாயூரப்பன் சன்னதி மற்றும் மடப்பள்ளி பழுதுபார்த்து வர்ணம் தீட்டும் பணிகள், ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் கோயிலின் அனைத்து மரக்கதவுகளை பழுதுபார்த்து புதுப்பித்தல், ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கோயிலின் வடக்கு மற்றும் தெற்கு பக்கங்களில் தரைத்தளம் அமைத்தல், ரூ.10.50 லட்சம் மதிப்பீட்டில் க்யூ வரிசை அமைத்தல், ரூ.11.40 லட்சம் மதிப்பீட்டில் அஷ்டாங்க விமானம் பழுதுபார்த்து வர்ணம் தீட்டுதல், ரூ.14.30 லட்சம் மதிப்பீட்டில் மகாமண்டபம் பழுதுபார்த்து வர்ணம் தீட்டுதல், ரூ.28.19 லட்சம் மதிப்பீட்டில் கோயில் முழுவதும் மின் இணைப்புகள் பழுதுபார்த்து புதுப்பித்தல் என 9 பணிகள் ரூ.1.41 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த திருப்பணிகளுக்கான பாலாலய நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சென்னை மண்டல இணை ஆணையர் ரேணுகாதேவி, பெருநகர சென்னை மாநகராட்சி உறுப்பினர் கயல்விழி ஜெயக்குமார், கோயில் செயல் அலுவலர் முரளிதரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோயிலில் ₹1.41 கோடி மதிப்பில் திருப்பணிகள்: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Besant Nagar Ashtalakshmi Temple ,Minister ,Shekharbabu ,Chennai ,Shekhar Babu ,Besantnagar Ashtalakshmi Temple ,Besant ,Nagar Ashtalakshmi Temple ,Dinakaran ,
× RELATED பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரும்...