×

கோவில்பட்டியில் பாஜ தேர்தல் அலுவலகம் திறப்பு

கோவில்பட்டி, பிப். 16: கோவில்பட்டியில் பாஜ தேர்தல் அலுவலகத்தை மாநில பொதுச் செயலாளர் பொன். பாலகணபதி திறந்து வைத்தார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி முக்கிய கட்சிகள், கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதேபோல் ஒவ்வொரு கட்சியினரும் தேர்தல் அலுவலகங்களை திறந்து வருகின்றனர். அதேபோல் கோவில்பட்டியில் பாஜ தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தேர்தல் அலுவலக திறப்பு விழா நடந்தது. மாதாங்கோவில் ரோடு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் எதிரில் நடைபெற்ற அலுவலக திறப்பு விழாவுக்கு மாநில பொதுச் செயலாளர் பொன்.பாலகணபதி தலைமை வகித்து திறந்து வைத்தார். மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன், மாவட்ட பார்வையாளர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சட்டமன்ற இணை ஒருங்கிணைப்பாளர் வேல்ராஜா, சட்டமன்ற பார்வையாளர் கிஷோர்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கோவில்பட்டியில் பாஜ தேர்தல் அலுவலகம் திறப்பு appeared first on Dinakaran.

Tags : BJP ,Kovilpatti ,BJP Election Office ,State ,General ,Pon. Balaganapathi ,
× RELATED கோவில்பட்டி ஆர்டிஓ ஆபீசில் சுமை...