×

50 பேருக்கு இலவச எரிவாயு இணைப்பு

சேந்தமங்கலம், பிப்.16: கொல்லிமலை ஒன்றியம் வாழவந்தி நாடு ஊராட்சி சோளக்காடு பகுதியில், பிரதமரின் உஜ்வாலா திட்டத்தில் இலவச கேஸ் இணைப்பு வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய பாஜ தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். மத்திய அரசின் நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலாளர் ரமேஷ் கலந்துகொண்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட 50 பயனாளிகளுக்கு இலவச கேஸ் இணைப்புகளை சிலிண்டர், அடுப்புகளுடன் வழங்கினார். விழாவில் கொல்லிமலை ஒன்றியத்தில் விவசாயிகளுக்கு கௌரவநிதி, பயிர் காப்பீடு, இலவச கேஸ் இணைப்பு உள்ளிட்ட திட்டங்கள் அதிக அளவில் வழங்கப்பட்டு வருகிறது. இதனை மலைவாழ் மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. விழாவில் பாஜ நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post 50 பேருக்கு இலவச எரிவாயு இணைப்பு appeared first on Dinakaran.

Tags : Senthamangalam ,Kollimalai Union Vazhavanti Nadu Panchayat Cholakad ,Union BJP ,President ,Karthikeyan ,Central government ,Dinakaran ,
× RELATED பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் பாஜ பிரமுகருக்கு 3 ஆண்டு சிறை