×

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொண்டுவரும் விவசாயிகளிடம் ரூ. 40 முதல் ரூ. 60 வரை வசூலிப்பதாகவும், எடை குறைவாக அளவிடுவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதை தடுக்க அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி ஒரு குவிண்டால் நெல்லுக்கான ஆதார விலை ரூ. 2,500 என்பதையும் ஒரு டன் கரும்புக்கான ஆதார விலை ரூ.4,000 என்பதையும் வழங்க வேண்டும், கொப்பரை தேங்காயை அரசே கொள்முதல் செய்து, தேங்காய் எண்ணெயை ரேஷன் கடையில் வழங்க வேணடும். பனை வெல்லத்தை கொள்முதல் செய்து வழங்க அரசு முன்வர வேண்டும்.

The post ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் ஜி.கே.வாசன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : GK Vasan ,CHENNAI ,TAMAGA ,President ,GK ,Vasan ,Dinakaran ,
× RELATED தென்சென்னை தொகுதி வாக்காளர்களின்...