×

வாணியாறு நீர்த்தேக்கத்திலிருந்து புதிய ஆயக்கட்டு, பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு உத்தரவு

தருமபுரி: வாணியாறு நீர்த்தேக்கத்திலிருந்து புதிய ஆயக்கட்டு, பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடபட்டுள்ள அறிக்கையில்:
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வாணியாறு நீர்த்தேக்கத்தின் தற்போதைய நீர் இருப்பினை கருத்தில் கொண்டு, புதிய ஆயக்கட்டு பகுதிகளில் குடிநீர் மற்றும் கால்நடை ஆதாரங்களை கருத்தில் கொண்டு ஈரபதத்தை பாதுகாக்கும் பொருட்டு ஒரு முறை அதாவது, முதல் மண்டலத்திற்கு 31/2 நாட்களுக்கும் இரண்டாம் மண்டலத்திற்கு 31/2 நாட்களுக்கும் அதாவது 16.02.2024 முதல் 22.02.2024 வரை 7 நாட்களுக்கு புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கும் மீதமுள்ள நீரை 23.02.2024 முதல் 05.03.2024 வரை 12 நாட்களுக்கு பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கும் வாணியாறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால் தருமபுரி மாவட்டத்தில் 6,463 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கபட்டுள்ளது.

The post வாணியாறு நீர்த்தேக்கத்திலிருந்து புதிய ஆயக்கட்டு, பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Vaniyaru Reservoir ,Dharumpuri ,Tamil Nadu government ,Darumpuri District, Pappretipatti Circle ,
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர்...