சென்னை: மகளிர் உரிமைத் தொகை மேல்முறையீட்டுக்கான விண்ணப்பம் என்று பரவி வரும் தவறான விண்ணப்பத்தை நம்ப வேண்டாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கோட்டாட்சியரிடம் தரலாம் என படிவம் ஒன்று வலைதளங்களில் பரவி வருகிறது. இதுபோன்ற எந்த விண்ணப்பத்தையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை என விளக்கம் அளித்துள்ளது. மனு தள்ளுபடி என எஸ்எம்எஸ் வந்த 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் மூலம் மட்டுமே மேல்முறையீடு செய்ய வேண்டும். தகுதிவாய்ந்த பயனாளி என்பதற்கான ஆவணங்களுடன் வருவாய் கோட்ட அலுவலருக்கு மேல்முறையீடு செய்ய வேண்டும். தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் என்று தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
The post உரிமைத் தொகை.. தவறான விண்ணப்பத்தை நம்ப வேண்டாம்: தமிழ்நாடு அரசு!! appeared first on Dinakaran.