×
Saravana Stores

வீட்டு பணிப்பெண்ணாக பணியாற்றிய சிறுமியை துன்புறுத்திய ஆசிரியை மீது வழக்கு: மகாராஷ்டிராவில் கொடுமை

தானே: வீட்டு பணிப்பெண்ணாக பணியாற்றிய சிறுமியை துன்புறுத்திய ஆசிரியை மீது தானே போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் தானேவைச் சேர்ந்த 33 வயது ஆசிரியை ஒருவர் வசித்து வருகிறார். அவருக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. அவரது வீட்டில் டெல்லியைச் சேர்ந்த 11 வயது பெண் வீட்டுப் பணிப் பெண்ணாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தனது குழந்தையை சரியாக பராமரிக்கவில்லை எனக்கூறி, பணிப்பெண்ணாக பணியாற்றி வரும் மைனர் சிறுமியை பைப்பால் அடித்தார்.

அந்த சிறுமிக்கு உணவும் கொடுக்கவில்லை. பட்டினியாக போட்டு வைத்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியை வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. இந்நிலையில் அந்த குடியிருப்பின் கட்டிடத்தில் வசித்துவந்த மற்றொரு பெண் ஒருவர், ஆசிரியையின் வீட்டிற்கு சென்றார். அப்போது அங்கு நின்றிருந்த சிறுமியை பார்த்து, அவரது நிலைமை குறித்து கேட்டறிந்தார். முழு விபரத்தையும் கேட்டறிந்த அந்தப் பெண், ஆசிரியையிடம் இதுகுறித்து கேட்டார். அதற்கு அவர், ‘இந்த விசயத்தில் நீங்கள் தலையிட வேண்டாம்’ என்று எச்சரித்துள்ளார்.

அதிர்ச்சியடைந்த பக்கத்துவீட்டு பெண், கபூர்பாவடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசாரின் விசாரணைக்கு பின்னர், குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டம், இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ், ஆசிரியை மீது வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் தானே பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post வீட்டு பணிப்பெண்ணாக பணியாற்றிய சிறுமியை துன்புறுத்திய ஆசிரியை மீது வழக்கு: மகாராஷ்டிராவில் கொடுமை appeared first on Dinakaran.

Tags : Maharashtra ,Thane ,Thane, Maharashtra ,
× RELATED வேட்பு மனு தாக்கல் நாளையுடன்...