×

மன அழுத்தமில்லாமல் புன்னகையுடனும் நம்பிக்கையுடனும் தேர்வுகளை எழுதுங்கள் : ஆளுநர் ரவி வாழ்த்து

சென்னை : மன அழுத்தமில்லாமல் புன்னகையுடனும் நம்பிக்கையுடனும் தேர்வுகளை எழுதுங்கள் என ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10,12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கியது. நாடு முழுவதும் 36 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதுகின்றனர். சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று முதல் மார்ச் 13ம் தேதி வரை நடைபெறவுள்ளது.இதேபோல் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள்இன்று முதல் மார்ச் 26 வரை நடைபெறவுள்ளது. சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத் தேர்வை 20 லட்சத்திற்கும் மேற்பட்டோரும், 12ம் வகுப்பு தேர்வை 15 லட்சத்திற்கும் மேற்பட்டோரும் எழுதுகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சிபிஎஸ்இ தேர்வில் பங்கேற்கும் எனது அனைத்து இளம் நண்பர்கள், அவர்களது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எனது வாழ்த்துக்கள். #தேர்வுவீரர்களுக்கு எனது வேண்டுகோள், மன அழுத்தமில்லாமல் புன்னகையுடனும் நம்பிக்கையுடனும் தேர்வுகளை எழுதுங்கள். உங்கள் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, தயாரிப்பு ஆகியவை சந்தேகத்திற்கு இடமின்றி உங்களுக்கு வெற்றியைத் தரும்! என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

The post மன அழுத்தமில்லாமல் புன்னகையுடனும் நம்பிக்கையுடனும் தேர்வுகளை எழுதுங்கள் : ஆளுநர் ரவி வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Governor Ravi ,Chennai ,Gov. ,Ravi ,CBSE Syllabus ,CBSE ,Governor ,
× RELATED ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்