×

சந்திரபாபு வழக்கு விசாரணை தொடர்பாக கூகுள், யூடியூப்பில் தேவையற்ற பதிவுகளை நீக்க வேண்டும்: ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவு

திருமலை: ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறன்மேம்பாட்டு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் குறித்து சமூக வலைதளத்தில் தேவையற்ற பதிவுகள் செய்யப்படுவதாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஆந்திர உயர்நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆட்சேபகரமான பதிவுகள் என்று கூறியும் கூகுள் மற்றும் யூடியூப் பதிவுகளை நீக்கவில்லை என அரசு தரப்பு வழக்கறிஞர் ஏ.ஜி.ஸ்ரீராம் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதற்கு அதிகாரபூர்வ உத்தரவு அல்லது நீதிமன்ற ஆணை இருந்தால் மட்டுமே அகற்ற முடியும் என கூகுள் மற்றும் யூடியூப் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதனையடுத்து இந்த பதிவுகளை உடனடியாக நீக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் மேலும் சிலரை எதிர்மனுதாரராக இணைத்து அரசு தரப்பு வழக்கறிஞர் ஏ.ஜி.ஸ்ரீராம் துணை மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் விசாரணையை 6 வாரங்களுக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

The post சந்திரபாபு வழக்கு விசாரணை தொடர்பாக கூகுள், யூடியூப்பில் தேவையற்ற பதிவுகளை நீக்க வேண்டும்: ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chandrababu ,Google ,YouTube ,Andhra High Court ,Tirumala ,Former ,Chief Minister ,Andhra Pradesh ,
× RELATED கூகுள் மேப்பை நம்பி...