×

மாநிலங்களவை எம்பி 33 ஆண்டுகால பதவியை துறந்தார் மன்மோகன்சிங்

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் 33 ஆண்டுகள் மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்டு வந்தது முடிவுக்கு வந்துள்ளது. சோனியா முதன்முறையாக தேர்வு செய்யப்பட உள்ளார். பொருளாதார வல்லுநராக இருந்த மன்மோகன்சிங் மாநிலங்களவைக்கு 1991 அக்டோபர் மாதம் தேர்வு செய்யப்பட்டார். 1991 முதல் 1996 வரை நரசிம்மராவ்ஆட்சிக்காலத்தில் நிதியமைச்சராக இருந்த மன்மோகன்சிங் 2004 முதல் 2014 வரை பிரதமராக இருந்தார். அப்போதும் அவர் தொடர்ந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு வந்தார். 1991 அக்டோபர் 1 முதல் 2019 ஜூன் 14 வரை தொடர்ந்து 5 முறை அசாம் மாநிலத்தில் இருந்து மன்மோகன்சிங் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு வந்தார். அதன்பின் 2019 ஆகஸ்ட் 20 முதல் 2024 ஆகஸ்ட் 3ம் தேதி வரை ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு அவர் தேர்வு செய்யப்பட்டார். இடையில் 1999ல் தெற்கு டெல்லி மக்களவை தேர்தலில் போட்டியிட்டு அவர் தோல்வி அடைந்தார். 91 வயதான மன்மோகன்சிங் தற்போது மாநிலங்களவை எம்பி பதவியை துறந்துள்ளார்.

The post மாநிலங்களவை எம்பி 33 ஆண்டுகால பதவியை துறந்தார் மன்மோகன்சிங் appeared first on Dinakaran.

Tags : Manmogansingh ,New Delhi ,Former ,Manmogansing ,Sonia ,
× RELATED ஆட்சி மாறியதும் ரகசியங்கள்...