×

வாலாஜாபேட்டையில் அரசு மகளிர் கல்லூரிக்குள் அனுமதியின்றி நுழைந்த அதிமுக நிர்வாகி உள்பட 20 பேர் மீது வழக்கு

சென்னை : வாலாஜாபேட்டையில் அரசு மகளிர் கல்லூரிக்குள் அனுமதியின்றி நுழைந்த அதிமுக நிர்வாகி உள்பட 20 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. அதிமுக மாவட்ட மகளிர் அணி செயலாளர் ராதிகா, கட்சி பிரமுகர் சாந்தி உள்பட 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கல்லூரிக்குள் நுழைந்து பயன்படுத்தப்படாமல் இருந்த கழிவறையை சுத்தம் செய்வதுபோல வீடியோ எடுத்துள்ளனர். பயன்படாத கழிவறை சுத்தமாக இல்லை என மாணவிகள் பெயரில் அதிமுகவினரே புகார் கூறி சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தவறான தகவலை திணித்து வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கல்லூரி முதல்வர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

The post வாலாஜாபேட்டையில் அரசு மகளிர் கல்லூரிக்குள் அனுமதியின்றி நுழைந்த அதிமுக நிர்வாகி உள்பட 20 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Government Women's College ,Walajapet ,CHENNAI ,women's college ,Radhika ,Shanti ,Dinakaran ,
× RELATED காரைக்காலில் அரசு மகளிர் கல்லூரியில் வரலாற்று தினம் கொண்டாட்டம்