×

கோடை சீசன் நெருங்கிய நிலையில் ரோஜா செடி பராமரிப்பு பணி தீவிரம்

ஊட்டி : ரோஜா பூங்காவில் செடிகள் கவாத்து செய்யப்பட்ட நிலையில், இயற்கை உரமிடும் பணிகள் நடந்து வருகிறது.ஆண்டு தோறும் கோடை சீசன் போது ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டும், கவருவதற்காகவும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதில், முக்கியமான நிகழ்ச்சிகள் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நடக்கும் மலர் கண்காட்சி, ரோஜா பூங்காவில் நடக்கும் ரோஜா கண்காட்சி மற்றும் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நடக்கும் பழக்கண்காட்சியாகும். கோடை சீசன் நெருங்கிய நிலையில், தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, மரவியல் பூங்கா மற்றும் தமிழகம் மாளிகை பூங்கா ஆகியவைகள் மும்முரமாக நடந்து வருகிறது.

ஆண்டு தோறும் மே மாதம் முதல் வாரத்தில் ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி நடத்துவது வழக்கம். இதனால், இப்பூங்கா முன்னதாகவே தயார் செய்யப்படும். இம்மாதம் துவக்கத்தில் இப்பூங்காவில் உள்ள ரோஜா செடிகள் கவாத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது செடிகளை பராமரிக்கும் பணியில் பூங்காக ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக, ரோஜா செடிகளை பராமரிக்கும் பணியில் அதிக அக்கறை செலுத்தி வருகின்றனர். தற்போது நாள்தோறும் ரோஜா செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ரோஜா செடிகளுக்கு தற்போது இயற்கை உரமிடும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இன்னும் இரு வாரங்களில் ரோஜா செடிகள் நன்கு வளர்ந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் முதல் வாரத்திற்கு மேல் மொட்டுக்கள் காணப்படும். இரண்டாவது வார்த்திற்கு மேல் மலர்கள் பூத்துவிடும். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்லலாம் என பூங்கா ஊழியர்கள் தெரிவித்தனர்.

The post கோடை சீசன் நெருங்கிய நிலையில் ரோஜா செடி பராமரிப்பு பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Rose Park ,Dinakaran ,
× RELATED ஊட்டி பூங்காவில் பூத்துக்குலுங்கும் வண்ண, வண்ண ரோஜா மலர்கள்