×

திருவாடானை அருகே திருவெற்றியூரில் லாரியில் ஏற்றிச்சென்ற வைக்கோலில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

திருவாடானை : திருவாடானை அருகே திருவெற்றியூரில் வைக்கோல் ஏற்றிச்சென்ற லாரியில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவாடானை அருகே திருவெற்றியூரில் தற்போதுநெல் அறுவடைமுடிந்துள்ள நிலையில் வயல்களில் எஞ்சிய வைகோலை இயந்திரம் மூலம் கட்டுகளாக கட்டி வியாபாரிகள் லாரிகளில் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களுக்கு ஏற்றி செல்கின்றனர்.

இந்நிலையில் நேற்று சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் லாரியில் வைகோலை விலைக்கு வாங்கி ஏற்றிக்கொண்டு சென்றபோது திருவெற்றியூர் கோயில் குடியிருப்பு பகுதியை கடந்து செல்லும் போது சாலையின் குறுக்கே சென்ற மின் கம்பியில் வைகோல் லாரி உரசி உள்ளது. இதனால் திடீரென வைக்கோல் கட்டுகள் தீப்பற்றி எரிந்துள்ளது.
குடியிருப்பு பகுதியில் லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சாலையில் வந்த பொதுமக்கள் கூச்செலிட்டனர். வைக்கோலில் தீப்பற்றி எரிவதை அறிந்த டிரைவர் முருகன் லாரியை வேகமாக ஓட்ட துவங்கினார்.

இதற்கிடையே தீ மளமளவென பற்றி எரிந்த நிலையில் வைக்கோல் கட்டுகள் சாலைகளில் ஆங்காங்கே சிதறி ஓடியது. இதனால் சாலை முழுவதும் நெருப்பு எரிந்து புகை மண்டலமாக காட்சியளித்தது. தகலறிந்து வந்த ஆர்எஸ். மங்கலம் தீயணைப்புத்துறையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

The post திருவாடானை அருகே திருவெற்றியூரில் லாரியில் ஏற்றிச்சென்ற வைக்கோலில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvettiyur ,Thiruvadanai ,Tiruvettiyur ,
× RELATED திருவாடானை அரசு கல்லூரியில் இரண்டாம் கட்ட பயிற்சி முகாம்