×

மாணவர்களுக்கு கல்விக்கடன்

சேலம், பிப்.14: சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் சேலம் தொங்கும்பூங்கா மாநகராட்சி பல்நோக்கு அரங்கில் நாளை (15ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கல்விக்கடன் மேளா நடத்தப்படுகிறது. இம்முகாமில் கல்விக்கடன் தேவைப்படும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மற்றும் வெளி மாவட்டங்களில் குடியிருந்து சேலம் மாவட்டத்தில் பயின்று வரும் மாணவ, மாணவிகள் பங்கேற்று பயனடைய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த கல்விக்கடன் மேளாவில், ஏற்கனவே கல்விக்கடன் வேண்டி விண்ணப்பித்தவர்கள் மட்டுமல்லாமல், புதிதாக கல்விக்கடன் தேவைப்படுபவர்கள் நேரடியாக கலந்துகொண்டு பயன்பெறலாம்.இக்கல்விக்கடன்களை பெற விரும்பும் மாணவ, மாணவிகள் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், ரேஷன்அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பான் அட்டை நகல், சாதிச்சான்று நகல் மற்றும் வருமான சான்று நகல் ஆகிய ஆவணங்களை விண்ணப்பிக்க ஏதுவாக கொண்டு வர வேண்டும். இம்முகாமில், சேலம் மாவட்டத்தில் உள்ள 44 வங்கிகள் கலந்துகொண்டு மாணவ, மாணவிகள் வழங்கும் கல்விக்கடன் விண்ணப்பங்களை உடனடியாக பரிசீலித்து கடன் வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, கல்விக்கடன் தேவைப்படும் மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post மாணவர்களுக்கு கல்விக்கடன் appeared first on Dinakaran.

Tags : Salem ,Salem District ,Collector ,Brinda Devi ,Salem Thongumpoonga Corporation ,Dinakaran ,
× RELATED சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே...